SOURCE :- INDIAN EXPRESS

வீட்டில் இருக்கும் மல்லிகைப் பூச் செடி பூக்கவில்லையா? கவலையே படாதீர்கள். பயன்படுத்திவிட்டு தூர வீசுற எலுமிச்சை தோலை தண்ணீரில் ஊற வைத்து பயன்படுத்தி மல்லிகைப் பூச்செடியை கொத்து கொத்தாக பூக்க வைக்கலாம். பயன்படுத்திவிட்டு தூர வீசுற எலுமிச்சை தோலை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

Advertisment

உங்கள் வீட்டில் மல்லிகைப பூச்செடிக்கு எலுமிச்சை தோல் கரைசலை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம். உங்கள் வீட்டில் எலுமிச்சை பழம் சாறு பிழிந்து எடுக்கப்பட்டபின், அந்த தோலை தூர தூக்கி வீசாமல், அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு 2 லிட்டர் வாட்டர் பாட்டில் எடுத்துக்கொள்ளுங்கள். அதில்  1 லிட்டர் தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள். அதில், நறுக்கிய இந்த எலுமிச்சை தோலை உள்ளே போட்டு மூடிவிடுங்கள். இந்த மூன்று நாட்களும் அவ்வப்போது, அந்த வாட்டர் பாட்டிலை குலுக்கிவிடுங்கள்.

3 நாட்கள் கழித்து அந்த தண்ணீரை வடிகட்டி ஒரு ஸ்பிரேயர் பாட்டிலில் ஊற்றிக்கொண்டு. அதை அந்த மல்லிகைப் பூச்செடி மீது ஸ்பிரே செய்யுங்கள். இதில் உள்ள அமிலத் தன்மையால் மல்லிகைச் செடி நிறைய மொட்டுகளை விட்டு பூக்கும். மல்லிகைச் செடி நிறைய கிளைக்கும். அதே போல எறும்பு புற்று இருந்தாலும் அதன் மீது ஸ்பிரே செய்தால் எறும்பு ஒழியும். வீட்டிலேயே எளிய முறையில் செய்து நீங்கள் உங்கள் வீட்டு மல்லிகைச் செடியைக் கொத்துக் கொத்தாகப் பூக்க வைக்கலாம்.

SOURCE : TAMIL INDIAN EXPRESS