SOURCE :- INDIAN EXPRESS

எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிய சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும், காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்கும்படியும் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது தாக்கல் செய்திருந்த பிரமாணப் பத்திரத்தில் சொத்து விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை மறைத்து தெரிவித்திருப்பதாகக் கூறப்பட்ட புகாரில், அவர் மீது வழக்கு பதிவுசெய்ய ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை (ஜனவரி 22) தீர்ப்பளித்துள்ளது.

மேலும், எடப்பாடி பழனிசாமி காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தாக்கல் செய்திருந்த பிரமாணப்பத்திரத்தில் பொய்யான தகவல்களை பதிவு செய்துள்ளதாக தேனியைச் சேர்ந்த மிலானி என்பவர் சேலம் 1-ஆவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisment

Advertisement

இந்த நிலையில், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

இந்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிய பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும், காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்கும்படியும் எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட்டுள்ளது.

SOURCE : TAMIL INDIAN EXPRESS