SOURCE :- BBC NEWS

பஹல்காமுக்கு சுற்றுலா சென்ற தமிழக பயணிகள் கூறியது என்ன?
22 நிமிடங்களுக்கு முன்னர்
“பஹல்காமுக்கு நாங்கள் சென்று வந்த பிறகு தாக்குதல் சம்பவம் நடந்தது. தப்பித்தால் போதும் என விடுதியில் இருந்து கிளம்பினோம். ஆனால், காஷ்மீரில் இருந்து டெல்லிக்கு வரும் பயணம், அவ்வளவு எளிதாக இருக்கவில்லை” எனக் கூறுகிறார், சென்னையைச் சேர்ந்த சுமதி. தனது முதல் காஷ்மீர் பயணமே இப்படி முடியும் என எதிர்பார்க்கவில்லை என்று அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி மதியம், ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தினர். இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக, அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலின்போது காஷ்மீரில் இருந்த தமிழ்நாட்டுப் பயணிகளின் மனநிலை என்ன? அவர்கள் ஊர் திரும்புவதில் சிக்கல் இருந்ததா?
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
SOURCE : THE HINDU