SOURCE :- INDIAN EXPRESS
இட்லி சாப்பிட்டே உடல் எடையை குறைக்க முடியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆனால் உடல் எடை குறைப்பதற்காகவே இட்லியில் ஒரு டிஷ் இருக்கிறது. அது என்ன என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு
உளுந்து
வர மிளகாய்
உப்பு
இஞ்சி
கொத்தமல்லி தழை
எண்ணெய்
கடுகு
சீரகம்
செய்முறை
ஒரு பவுலில் பாசிப்பருப்பு, உளுந்து இரண்டையும் சேர்த்து நன்றாக கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் அதில் காரத்திற்காக சிறிது வர மிளகாய் சேர்த்து ஊற வைக்கவும். இரண்டும் நன்றாக ஊறியதும் சிறு தண்ணீர் சேர்த்து நன்கு மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கை வைத்து கரைத்து ஒரு இரவு முழுவதும் வைத்தால் மாவு நன்கு புளித்து புசுபுசுன்னு வந்துவிடும்.
பின்னர் அதை நன்கு கலந்து அதில் துருவிய இஞ்சி, கொத்தமல்லி தழை சேர்க்கவும். மேலும் எண்ணெயில் கடுகு, சீரகம் வறுத்து சேர்த்து இவை அனைத்தையும் கலந்து விடவும். மாவு கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
உடல் எடை குறைய அரிசி இல்லாமல் புரதம் சத்து நிறைந்த பாசிப்பருப்பு இட்லி இப்படி செஞ்சி பாருங்க
பின்னர் இதை எப்போதும் போல இட்லி பானையில் ஊற்றி எடுத்தால் சுவையான இட்லி ரெடியாகிவிடும். இதற்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என எல்லா வகையான சட்னி சாம்பார் வைத்து சாப்பிடலாம். சுவையாகவும் இருக்கும் உடல் எடை குறைக்கவும் உதவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
SOURCE : TAMIL INDIAN EXPRESS