SOURCE :- BBC NEWS

விஜயை பார்த்ததும் அவரது வாகனத்தின் மேல் ஏறிய தொண்டர்கள்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கோவை மாவட்டம் குரும்பபாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கமிட்டி மாநாடு இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பங்கேற்க தவெக தலைவர் விஜய், சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் கோவை சென்றார்.

முன்னதாக, கோவை விமான நிலையத்தில் ஏராளமான தொண்டர்கள், ரசிகர்கள் குழுமியிருந்தனர். விமான நிலையத்தில் இறங்கிய பின் விஜய் திறந்த வாகனம் மூலம் தொண்டர்களை பார்த்து கையசைத்துக் கொண்டே சென்றார். அப்போது தொண்டர்கள் சிலர் கார் மீது ஏறி தவெக கொடியை அவருக்கு வழங்கினர்.

அவர்களை கீழே இறங்குமாறு கூறிய விஜய், அவர்கள் வழங்கிய கட்சிக் கொடியையும் பெற்றுக்கொண்டார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : BBC